பெண் தேவதை...தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
பெண் தேவதை...👸👸👸 தேவதைகள் வீட்டிலும் வாசம் செய்வர் பெண் குழந்தை வடிவில்... ஓர் தந்தைக்கும் மகளுக்கும் உள்ள அந்த அழகான உறவு பற்றி இந்த குறும்பதிவில் காண்போம்... ஓடி வருகையிலே – கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய் ஆவி தழுவு தடீ ! உச்சி தனை முகந்தால் – கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ ! கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ ! உன்னை முதல் முறை கண்ட அந்த நாள் என் வாழ்வின் உச்ச கட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன். கலியுகத்திலும் இந்த பூமிக்கு இறைவனால் தேவதையை அனுப்ப முடியும் என்றால் அது உன் உருவில் மட்டுமே. உன் மதி முகம் பார்க்க ஏங்கிய திங்கள் பத்து. உன் ஸ்பரிசம் அனுபவித்த அந்த தருணம் உணர்ந்தேன் முகிழின் வாசம். தினம் உன் முகம் காட்டும் திகழ் முன் அந்த பரிதியும் தோல்விகொள்ளும். உன் பிஞ்சு கால் விரல்களை பதித்து நீ என் மார்பின் மேல் நடை பழகும் தருணம் நான் உணர்ந்தேன் தென்றலும் நடை பழகும் நேரம் இது என. உன் விறல் பிடித்து நகம் கடிக்கும் வேளையில் உ...