Posts

Showing posts from April, 2018

காதலில் விழுந்தேன் (FALL IN LOVE)

Image
பிழைகளுக்கு  மன்னிப்பு அவசியம் முதல்  காதல்                    இது உயிருக்கும் மனதிற்கும் இடையிலான அற்புத உணர்வு, அன்பின் அருமை பிரதிபலிப்பு...... முதல் காதல்.....       நான் பார்த்த அந்த அழகு முகம் கண் கலங்கி, கண்ணங்கள் சிவக்க,  என்னை அள்ளி அணைத் தாயே .  என் மெய் தொட்ட முதல் தேவதை நீயே.  அன்று உயிர் பெற்றது  இதயம் மட்டும் அல்ல என் உலகமும்......... என் உடல்  பிராண வாயு உட்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் அவள் நினைவுகள் என்னை ஆட்கொள்ளும், உன் அணைப்பில் மெய் மறந்தேன்.... உன்னை அல்ல......         என் முதல் காதலியே நான் உன்னை சந்தித்த அந்த இடம் இன்று வரை நினைவில் வர மறுக்க, ஒரு சில  கற்பனைகள் கதை சொல்கிறது என் கண்களுக்கு....       இருள் சூழ்ந்த அவ்வறையில்  உன்னை எனக்கு அறிமுகம் செய்தான் அந்த பிரம்மன், ஒரு சில மாதங்கள் நீ வைத்த சிறையில் மனிதன் ஆனேன் இதயம் பெற்றேன்.....       ...