Posts

Showing posts from 2018

காதலில் விழுந்தேன் (FALL IN LOVE)

Image
பிழைகளுக்கு  மன்னிப்பு அவசியம் முதல்  காதல்                    இது உயிருக்கும் மனதிற்கும் இடையிலான அற்புத உணர்வு, அன்பின் அருமை பிரதிபலிப்பு...... முதல் காதல்.....       நான் பார்த்த அந்த அழகு முகம் கண் கலங்கி, கண்ணங்கள் சிவக்க,  என்னை அள்ளி அணைத் தாயே .  என் மெய் தொட்ட முதல் தேவதை நீயே.  அன்று உயிர் பெற்றது  இதயம் மட்டும் அல்ல என் உலகமும்......... என் உடல்  பிராண வாயு உட்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் அவள் நினைவுகள் என்னை ஆட்கொள்ளும், உன் அணைப்பில் மெய் மறந்தேன்.... உன்னை அல்ல......         என் முதல் காதலியே நான் உன்னை சந்தித்த அந்த இடம் இன்று வரை நினைவில் வர மறுக்க, ஒரு சில  கற்பனைகள் கதை சொல்கிறது என் கண்களுக்கு....       இருள் சூழ்ந்த அவ்வறையில்  உன்னை எனக்கு அறிமுகம் செய்தான் அந்த பிரம்மன், ஒரு சில மாதங்கள் நீ வைத்த சிறையில் மனிதன் ஆனேன் இதயம் பெற்றேன்.....       ...

தலைமுறை THALAIMURAI

Image
"தலைமுறை" வணக்கம் நண்பர்களே..... இது எனது முதல் பதிவு.... பிழைகளுக்கு  மன்னிப்பு அவசியம்  .... தலைமுறை என்பது பல கோடி யுகங்களின் பாலம், நம் முன்னோர்களை நம்மக்கு அறிமுகம் செய்யும் ஓர் கால கருவி, நம்மில் பலரும் அறியா ஓர் விடுகதை........... இன்று நாம் பொழுதுபோக்காக உபயோகிக்கும்,  நமது கை தொலைபேசி இதன் மூலம் நாம் இந்த உலகை கைக்குள் அடக்கி உள்ளோம். இதற்கும் நம் தலைப்புக்கும் சில சம்பந்தங்கள் உள்ளன.... அன்று புறா கால்கள் தொலைத்தொடர்புக்கு.... இன்று புறாக்கள் இனம் அழிய நம் தொலைத்தொடர்பு.... தலைமுறை எங்கே.... பின் வரும் எனது மனித இனத்துக்கு இனி எல்லாம் இந்த கை பேசி எடுத்து காட்டும் வெறும் இணைய புகை படமாக...  அழிந்த அண்ணப்பறவை வரிசையில் நின்று கொண்டு உள்ளது நம் தலைமுறை.... நம் மூதாதையர்கள் உபயோகித்த பொருள் எல்லாம் இன்று அருங்காட்சியம் சென்று பார்க்கும் நாம் நாளை தலைமுறையை தேடி அருங்காட்சியகம் செல்ல வேண்டும்  பறவைகள் சரணாலயம் அழிந்து பறவைகள் காட்சியகம் காண தயார் ஆகுங்கள்  நன்றி கலந்த நட்புடன்  ...