Posts

Showing posts from 2023

பெண் தேவதை...தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

Image
  பெண் தேவதை...👸👸👸 தேவதைகள் வீட்டிலும் வாசம் செய்வர் பெண் குழந்தை வடிவில்... ஓர் தந்தைக்கும் மகளுக்கும் உள்ள அந்த அழகான உறவு பற்றி இந்த குறும்பதிவில் காண்போம்... ஓடி வருகையிலே – கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய் ஆவி தழுவு தடீ ! உச்சி தனை முகந்தால் – கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ ! கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ ! உன்னை முதல் முறை கண்ட அந்த நாள் என் வாழ்வின் உச்ச கட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன். கலியுகத்திலும் இந்த பூமிக்கு இறைவனால் தேவதையை அனுப்ப முடியும் என்றால் அது உன் உருவில் மட்டுமே. உன் மதி முகம் பார்க்க ஏங்கிய திங்கள் பத்து. உன் ஸ்பரிசம் அனுபவித்த அந்த தருணம் உணர்ந்தேன் முகிழின் வாசம். தினம் உன் முகம் காட்டும்  திகழ் முன் அந்த பரிதியும் தோல்விகொள்ளும். உன் பிஞ்சு கால் விரல்களை பதித்து நீ என் மார்பின் மேல் நடை பழகும் தருணம் நான் உணர்ந்தேன் தென்றலும் நடை பழகும் நேரம் இது என. உன் விறல் பிடித்து நகம் கடிக்கும் வேளையில் உ...

வீணையடி நீ யெனக்கு..

Image
காதலாய் காதல்💖💝 இந்த பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு காரணமானது காதல் அந்த காதலின் மறுபின்பம் காதலி...  வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு; பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு, தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு. காதலோடு தலைவியையும் அவளின் காதல் பற்றி பார்ப்போம் இந்த குறும் பதிவில். ஒரு ஆணின் வாழ்வில் பெண்ணின் காதல் பங்கானது மிக பெரிது... அவன் (இறைவன்) அருள் இன்றி அணுவும் அசையாது என்பர், இங்கு அவள் இன்றி அவனே (இறைவனே) இல்லை என்பேன். தலைவியை எண்ணி தலைவன் உருகும் வேளையில்.......... உன் இடை எனும் பிரம்ம அஸ்திரம் குழந்தைக்கான அமர்விடம் மட்டும் அல்ல என் கண்கள் சில நிமிடம் பிரவேசிக்கும் மர்ம பிரதேசம்... நான் சாய்ந்து மறைந்து இளைப்பாற கடவுளால் கட்டப்பட்ட கந்தமாதனம் மறைத்து வைக்கப்பட்டது ஏனோ... கார்மேக கரிய கூந்தலும், அழகிய பிறை போன்ற நெற்றி தனையும், அதன் கீழ் வில் புருவம், கவர்ந்து இழுக்கும் அவ்விரு கண்கள், இமயம் போல் அழகாய் சரிந்த உன் நாசி, அமிர்தம் சுரக்கும் அந்த அழகிய இதழ்கள் இதை காணாமல் ஒருகணம் போனாலும் அந்நாள் நெருப்பாய...