தலைமுறை THALAIMURAI
"தலைமுறை" வணக்கம் நண்பர்களே..... இது எனது முதல் பதிவு.... பிழைகளுக்கு மன்னிப்பு அவசியம் .... தலைமுறை என்பது பல கோடி யுகங்களின் பாலம், நம் முன்னோர்களை நம்மக்கு அறிமுகம் செய்யும் ஓர் கால கருவி, நம்மில் பலரும் அறியா ஓர் விடுகதை........... இன்று நாம் பொழுதுபோக்காக உபயோகிக்கும், நமது கை தொலைபேசி இதன் மூலம் நாம் இந்த உலகை கைக்குள் அடக்கி உள்ளோம். இதற்கும் நம் தலைப்புக்கும் சில சம்பந்தங்கள் உள்ளன.... அன்று புறா கால்கள் தொலைத்தொடர்புக்கு.... இன்று புறாக்கள் இனம் அழிய நம் தொலைத்தொடர்பு.... தலைமுறை எங்கே.... பின் வரும் எனது மனித இனத்துக்கு இனி எல்லாம் இந்த கை பேசி எடுத்து காட்டும் வெறும் இணைய புகை படமாக... அழிந்த அண்ணப்பறவை வரிசையில் நின்று கொண்டு உள்ளது நம் தலைமுறை.... நம் மூதாதையர்கள் உபயோகித்த பொருள் எல்லாம் இன்று அருங்காட்சியம் சென்று பார்க்கும் நாம் நாளை தலைமுறையை தேடி அருங்காட்சியகம் செல்ல வேண்டும் பறவைகள் சரணாலயம் அழிந்து பறவைகள் காட்சியகம் காண தயார் ஆகுங்கள் நன்றி கலந்த நட்புடன் ...