வீணையடி நீ யெனக்கு..

காதலாய் காதல்💖💝

இந்த பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு காரணமானது காதல் அந்த காதலின் மறுபின்பம் காதலி... 

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.

காதலோடு தலைவியையும் அவளின் காதல் பற்றி பார்ப்போம் இந்த குறும் பதிவில்.

ஒரு ஆணின் வாழ்வில் பெண்ணின் காதல் பங்கானது மிக பெரிது...

அவன் (இறைவன்) அருள் இன்றி அணுவும் அசையாது என்பர்,
இங்கு அவள் இன்றி அவனே (இறைவனே) இல்லை என்பேன்.


தலைவியை எண்ணி தலைவன் உருகும் வேளையில்..........

உன் இடை எனும் பிரம்ம அஸ்திரம் குழந்தைக்கான அமர்விடம் மட்டும் அல்ல என் கண்கள் சில நிமிடம் பிரவேசிக்கும் மர்ம பிரதேசம்...

நான் சாய்ந்து மறைந்து இளைப்பாற கடவுளால் கட்டப்பட்ட கந்தமாதனம் மறைத்து வைக்கப்பட்டது ஏனோ...

கார்மேக கரிய கூந்தலும், அழகிய பிறை போன்ற நெற்றி தனையும், அதன் கீழ் வில் புருவம், கவர்ந்து இழுக்கும் அவ்விரு கண்கள், இமயம் போல் அழகாய் சரிந்த உன் நாசி, அமிர்தம் சுரக்கும் அந்த அழகிய இதழ்கள் இதை காணாமல் ஒருகணம் போனாலும் அந்நாள் நெருப்பாய் வேகும் என் தேகம்...


கொலைகாரி 

யார் இந்த மங்கை நம்மை விட மென்மையானவள் என சில நேரம் சிந்திக்கும் பூலோக பூக்களை எல்லாம் தற்கொலைக்கு தூண்டாதே...

உன் இதழ் சுவைக்காமல் உணக்கம் கொண்டு கடல் சேர்ந்து உயிர் மாய்க்கும் தேன் அடைகள்...


சண்டைகாரி 

நம்முள் நடக்கும் சிறு சிறு சண்டைகளுக்கு பின்பு உணர்கிறேன் நீ என் மீது கொண்ட காதலின் ஆழம்,
அந்த சண்டைக்கு பின் நீ காட்டும் பரிவு முகத்திற்காகவே சிறு சண்டைகள் அவசியம் என தோன்றுகிறது.


காதலும் காதலிக்கும்  
  • உன்னோடு காதல் கொள்ள காதலும் கனவு கொள்ளும்...
  • உன் கூந்தல் சேர பூக்களும் காதல் கொள்ளும்...
  • உன் கயல் விழி ஒட்டிக்கொண்ட மையிற்கு மெய் மறக்கும்...
  • உன் காலோடு உரசிக்கொள்ள கால்கொலுசு கவிபாடும்...
  • உன் கையோடு உறவாட கை வளையல் இசை இசைக்கும்...
  • ஒட்டியாணம் உயிர்வாழ ஒட்டிக்கொள்ளும் உன் இடையோடு...
  • முத்து மாலையும் அதன் அம்பரினால் ஆன பதக்கமும் சண்டை இட்டுக்கொள்கிறது உன் மார்போடு மறைந்து கொள்ளபோவது யார் என்று...
  • உன் காதோரம் நடனம் ஆடும் அந்த ஜிமிக்கி கம்மல் தினம் வருந்தும் உன் இடையோடு நளின போட்டியில் தோற்றத்தை எண்ணி .
  • தென்றல் கூட தோற்றுப்போகும் உன் இதனமான நாசி காற்றின் சுவாசத்தில்...
  • உன் அணிவிரலில் அணைந்து கொள்ள அந்த கணையாழியும் காதல் கொள்ளும் 
  • உணவு பூக்களில் மட்டுமே இருக்கும் என நினைத்து மலர்கள் தேடி அலையும் தேனீக்களுக்கு தெரியாதோ தேன் பெண்ணிலும் உண்டு என...(அவளின் தேன் போன்ற இனிமையான குரல்😉).

உன்னாலே உன்னாலே 

கற்காலம் முதல் ஆன் வாழ்வின் உந்து சக்தியானது உன் அன்பு காதல்...

காதலியே நீயின்றி ஏது குடும்பத்தில் குதூகலம்...

உன்னை கவிபாடும்  கடிதங்களை எதிர்பார்த்து தெரு முனையில் உறங்கி கிடக்கும் தபால்நிலைய சிகப்பு பெட்டிகள் பாவம் அறியாது இனி கடிதங்களை மனதோடு மனமே பரிமாறிக்கொள்ளும் என...


அந்த இறைவனிடம் 

அன்பே இப்பிறவியில் உன்னோடு வாழும் வரம் வேண்டி அன்று நின்றேன் இந்திரனனின் சொர்கலோகத்தில்...
இப்பிறவியின் இறுதியில் மீண்டும் நிற்பேன் அவனிடதில் அதே வரம் வேண்டி... 


பல தலைவனும் தலைவியும் அன்பால் இணைந்தும் கலந்தும் ஊடலும் கூடலும் கொண்டு அவர்கள் உணர்வுகளை நினைவுகளாக விட்டு சென்ற இந்த உலகில் நாமும் சொல்லி செல்வோம் அடுத்த தலைமுறைக்கு பெண்மையையும் அவள்கொண்ட காதலின் பெருமையையும்...


Love
Photo-Thanks to google

பொருள்/விளக்கம் 

கார்மேக கரிய கூந்தலும் : கருப்பு நிற மேகம் போன்ற கூந்தல் 


பிறை : நிலவில் சூரிய ஒளி விழும் பகுதிக்கு

நாசி : மூக்கு

உணக்கம் : வாட்டம்/வருத்தம்

தேன் அடைகள் : 
தேனீக்கள் மலர்களில் இருந்து பூந்தேனை உறிச்சி சேகரித்து அதிலிருந்து உருவாக்கும் தேன் இருக்கும் அடை அல்லது கூடு.

அம்பரி : 
இது ஆழ்ந்த சிகப்பு நிறம் கொண்ட கல் வகையாகும் (வைரம் போன்ற),
கார்னீலியன் என்று அழைக்கப்படும் இது ஒரு மதிப்பு மிக்க கல் வகையாகும்,
தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மெஹர்கரில் சுமார் 6000 வாரங்களுக்கு முன்பு இது பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளது,
இரும்பு காலத்திலும், சங்க காலத்திலும், சிந்துசமவெளி நாகரிக காலத்திலும் இது பயன்பாட்டில் இருந்துள்ளது.

பதக்கம் : கழுத்து சங்கிலியில் கோர்க்கபடும் தங்கத்தால் ஆனது (டாலர்).

நாசி காற்று : மூச்சு காற்று.

அணிவிரலில் : மோதிர விரல்

கணையாழி : மோதிரம் (இதற்கு உள்ள வேறு பெயர்கள்-அங்குலிகம், திருவாழி, மோதரம், விரற்பூண், விரலாழி)



என்றும் காதலுடன் 
சிவன்....!!!

Comments