காதலில் விழுந்தேன் (FALL IN LOVE)


பிழைகளுக்கு  மன்னிப்பு அவசியம்

முதல்  காதல் 


                 இது உயிருக்கும் மனதிற்கும் இடையிலான அற்புத உணர்வு,
அன்பின் அருமை பிரதிபலிப்பு......


முதல் காதல்.....

      நான் பார்த்த அந்த அழகு முகம் கண் கலங்கி, கண்ணங்கள் சிவக்க,  என்னை அள்ளி அணைத்தாயே .  என் மெய் தொட்ட முதல் தேவதை நீயே.  அன்று உயிர் பெற்றது  இதயம் மட்டும் அல்ல என் உலகமும்......... என் உடல்  பிராண வாயு உட்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் அவள் நினைவுகள் என்னை ஆட்கொள்ளும், உன் அணைப்பில் மெய் மறந்தேன்.... உன்னை அல்ல......
 
      என் முதல் காதலியே நான் உன்னை சந்தித்த அந்த இடம் இன்று வரை நினைவில் வர மறுக்க, ஒரு சில  கற்பனைகள் கதை சொல்கிறது என் கண்களுக்கு....

      இருள் சூழ்ந்த அவ்வறையில்  உன்னை எனக்கு அறிமுகம் செய்தான் அந்த பிரம்மன், ஒரு சில மாதங்கள் நீ வைத்த சிறையில் மனிதன் ஆனேன் இதயம் பெற்றேன்.....

      ஏனோ பத்து (10) எனும் இலக்கம் கண்டால் மனம் வருந்துகிறது காரணம் பத்து மாதம் நீ என்னை அந்த கருமை கருவறையில் சுமந்ததாலோ அல்லது என்னை பத்தே மாதத்தில் உன்னை விட்டு பிரித்து ஓர் உயிராய் இருந்த நம்மை  ஈர் உயிராக்கிதனாலோ......

      தாயே பருப்பு சாதமும் பஞ்சாமிர்தம் ஆனது உன் கை பட்ட வேளையில்....

     தமிழுக்கு வயது தேடும் என் சமூகமே தாய் அன்பின் வயதரிவாயா.....
   
     ராணுவம் கூட தர மறுக்கும் காவல், காற்று பட்டால் என் உடல் வலிக்கும் என நீ குடுத்த அந்த முந்தனையின் காவல்......

     ஈர் ஐந்து மாதங்கள் கருவோடு உறவாட மொழிகள் முக்கியம் இல்லை.....

     ஈன்ற முதல் இன்று வரை என்னை தவிர வேறு உறவுகள்  முக்கிக்கியம் இல்லை......

     ஈர் ஆறு மாதமும் பணம் தேடும் இந்த பணி சுமையில் உன்னை மறந்தேனோ என மனம் அறுக்கிறது







இப்படிக்கு குற்ற உணர்வுடன் மகன்........







Comments

Post a Comment